முடி வெட்டிக்கொண்டிருந்த இளைஞர் திடீர் மரணம்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் சலூன்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு முடி வெட்டுவதற்காக இளைஞர் ஒருவர் நேற்று வந்துள்ளார்.
அவருக்கு சரவணன் முடிவெட்டிக்கொண்டிருந்த போது திடீரென அந்த இளைஞர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி சலூன் கடைக்காரரை விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்த இளைஞர் அஞ்சுகம் காலனியைச் சேர்ந்த வினோத் என்பதும், சிதம்பரத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த அவருக்கு திருமணத்துக்கு பெண் பார்க்கப்பட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்தது.