முட்டை விளக்கு
முட்டை வடிவத்தில் இருக்கும் இந்த எல்இடி விளக்கு சாதாரண விளக்கை விட பிரகாசமான ஒளியைத் தரவல்லது. ஒரு முறை சார்ஜ் செய்து கொண்டால் ஏழு மணி நேரம் இயங்கக்கூடியது. வயர்லஸ் முறையில் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி உள்ளது. அலங்கார விளக்காகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
360 டிகிரி ஸ்கேனர்
360 டிகிரியும் சுழன்று மிகத் தெளிவாக ஸ்கேனிங் செய்யக்கூடிய திறன் கொண்டது. ஆளில்லா இடங்களில் என்ன இருக்கிறது என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள பயன்படுத்த முடியும். 40 மீட்டர் சுற்றளவு வரை ஸ்கேனிங் செய்யக்கூடியது. ரோபோக்களில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
லைஃப் பேக்
மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேக்கில் சூரிய சக்தி மூலம் யுஎஸ்பி சார்ஜர் செய்யலாம். புளூடூத் ஸ்பீக்கர், மேம்படுத்தப்பட்ட லாக்கர் ஆகியவை இருக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது. துணி கள், லேப்டாப் மற்ற பொருட்கள் வைப்பதற்கு தனித் தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது கூடுதல் அம்சம்.