முதலமைச்சர் மீதான புகார்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் முதலமைச்சர் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் முதல்வர் வட்டாரங்கள் மகிழ்ச்சியில் உள்ளன.