முதலமைச்சர் வீட்டில் கொள்ளை. பாதுகாப்பு பணியில் இருந்த 30 போலீஸார் இடமாற்றம்.

12மணிப்பூர் மாநில முதலமைச்சர் இபோபி சிங் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் நேற்று மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துவிட்டு தப்பித்து சென்றதால் மணிப்பூர் தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் காரணமாக முதல்வர் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 30 போலீஸார் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மணிப்பூர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

மணிப்பூர் மாநிலத்தில் தௌபால் மாவட்டத்தில் முதல்வர் இபோபி சிங்குக்கு சொந்தமான வீடு உள்ளது. ஓய்வு நேரங்களில் முதல்வர் இபோபி சிங் தனது குடும்பத்தினருடன் இங்கு வந்து தங்குவார். இந்நிலையில் இந்த வீட்டிற்கு முதல்வரின் மனைவியும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான லந்தோனி தேவி, நேற்று முன் தினம் வந்தபோது வீட்டில் உள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முதல்வர் வீட்டின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார், பணியை ஒழுங்காக செய்யாமல் அருகிலுள்ள முதல்வரின் சகோதரர் இபோடோம்பா வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 30 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கொள்ளை போன பொருள்களின் மதிப்பு குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply