முதலிரவை வீடியோ எடுக்க ரூ.2 லட்சம் கொடுத்த காதல் ஜோடி
பிரிட்டனை சேர்ந்த காதல் ஜோடி தங்களுடைய திருமணத்திற்கு பின்னர் நடைபெறவிருக்கும் முதலிரவை வீடியோ எடுக்க சுமார் ரூ.2 லட்சம் சம்பளம் கொடுத்து ஆள் ஒருவரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது
இந்த காதல் ஜோடிக்கு வரும் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் தங்களின் முதலிரவை வீடியோ படமெடுக்க ஆள் தேவை என்றும் இரவு ஒரு மணி முதல் மூன்று மணி வரை வேலை நேரம் என்றும் இதற்காக இந்திய மதிப்பில் ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகளில் முதலிரவும் ஒன்று என்பதால் தான் திருமண வீடியோ போல முதலிரவையும் வீடியோ எடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் எங்களுடைய விளம்பரத்திற்கு இதுவரை ஆள் கிடைக்கவில்லை என்றும் அந்த ஜோடி வருத்தப்பட்டுள்ளனர். திருமணத்தை வீடியோ பதிவு செய்யும் நபர் தலிரவை படம் பிடிக்க மறுத்து விட்டதாகவும், ஆனால் யாராவது தங்களுக்கு கிடைப்பார்கள் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் கூறினர்