முதலில் முதல்வர் பதவி, அதன் பின் கட்சி: ரஜினியின் பலே திட்டம்
முதல்வர் பதவியில் உட்கார்ந்த பின்னர் கட்சி தொடங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றது. ஆனால் முதல்வர் பதவியில் உட்காருவது நிஜத்தில் அல்ல, திரைப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்த படம் ஒரு அரசியல் படம் என்றும், ஒரு சாதாரண தொண்டன் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவியை அடைந்தது குறித்த படம் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன்பின்னரே அதிகாரபூர்வமாக ரஜினி கட்சியை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘நாற்காலி’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றன