முதல்நாள் டிரெஸ் வாங்கி அடுத்த நாள் ரிட்டர்ன் செய்யும் புது டிரெண்ட்
ஆன்லைனில் முதல் நாள் டிரஸ் வாங்கி அதை உடுத்தி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பின்னர் அடுத்த நாள் அந்த டிரஸ்ஸை ரிட்டர் செய்யும் வழக்கம் அதிகரித்து வருவதாக செய்திகள் வந்துள்ளது. பெரும்பாலும் இந்த டிரெண்ட் ஆன்லைனில் வாங்குபவர்களே செய்வதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள போட்டோ பிரியர்கள் ஆன்லைனில் புதிய துணிகள் வாங்கி, பின்னர் அதனை அணிந்து போட்டோ எடுத்து பின்னர் அந்த துணிகளை ரிட்டர்ன் செய்து விடுகின்றனர்.
புதுத்துணிகளுடன் தாங்கள் எடுத்த போட்டோவை பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து தங்களது பாலோயர்களை கவர்கின்றனர். ஒரு முறை அணிந்த துணிகளுடன் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் போட்டுவிட்டால், பின்னர் அதே துணியுடன் போட்டோ எடுத்து போட்டால் அது ஒருவித அசவுகரியத்தை கொடுக்கிறது என்பதால் இந்த புது ட்ரெண்ட் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இந்த டிரெண்டை கடைபிடித்து வருகின்றார்களாம்