சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தில் ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகிய பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது ரஜினியுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. திரையுலகிற்கு வந்த பத்து வருடங்களில் இதுவரை ரஜினியுடன் த்ரிஷா நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் இதுவரை ரஜினியுடன் நடிக்கவேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறவில்லை என்று ஆதங்காத்துடன் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில் இந்த பேட்டியை பார்த்த ரஜினி, த்ரிஷாவுக்கு லிங்கா படத்தில் ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதன் பயனாக ஒரு பாடலுக்கு நடனம் ஆட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
த்ரிஷா இதுவரை எந்த படத்திலும் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட சம்மதித்தவில்லை. ஆனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவர் இதற்கு மறுப்பேதும் கூறாமல் உடனே சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது.
த்ரிஷா தற்போது அஜீத் 55 படத்திலும், ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர கன்னட மொழியில் இரண்டு படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.