முதல்வரின் ஹெலிகாப்டர் பார்வை தூரத்து பார்வை: கமல்ஹாசன்

முதல்வரின் ஹெலிகாப்டர் பார்வை தூரத்து பார்வை: கமல்ஹாசன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டதை மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் குறை கூறி வருகின்றனர். இதற்கு முன்னர் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர்களும் ஹெலிகாப்டரில் சென்றுதான் புயல், வெள்ள சேதங்களை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பிரதமர், முதல்வர்கள் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழகத்தில் மட்டுமே தற்போது இது சர்ச்சைக்குரியதாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே கமல்ஹாசன் நேற்று விமர்சனம் செய்துள்ள நிலையில் இன்று அவர் இதுகுறித்து மீண்டும் கூறியதாவது:

மனிதாபிமானம் கருதி பிரதமர் தமிழகம் வந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வந்து பார்வையிட்டால் அரசு சக்கரம் வேகமாக சுழலும் என்றும், முதல்வரின் ஹெலிகாப்டர் பார்வை என்பது தூரத்து பார்வையாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

Leave a Reply