முதல்வருக்கு தெரியாமல் வருமானவரி சோதனைக்கு வாய்ப்பில்லை. பிரேமலதா விஜயகாந்த்
ரேசன் கடைகளில் விலை உயர்வு, உளுந்து நீக்கம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறனர். இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
முதலமைச்சர் அனுமதியில்லாமல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடந்திருக்க வாய்ப்பு இல்லை. வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் முதுகெலும்பு இல்லாமல் இருக்கின்றனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிட ஈ பி எஸ் அணி தயக்கம் காட்டுகிறது. மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கின்றனர்.
காவல்துறையில் வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல், மின் மீட்டர் வாங்குவதில் ஊழல் என அனைத்திலுமே ஊழல் மயமாகியுள்ளது. ஆளுநர் தமிழக முழுவதும் ஆய்வு செய்து மக்கள் குறைகளை களையட்டும் என சொன்னவர் தான் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. விரைவில் தேமுதிக ஆட்சி, ஆட்சி மாற்றத்திற்கான காலம் விரைகிறது