முதல்வருடன் பிரேமலதா-எல்.கெ.சுதிஷ் சந்திப்பு! பிரச்சார யுக்தி குறித்து ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் முதல்வர் தற்போது தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளார்.
இந்த நிலையில் சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ் ஆகியோர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது சேலம் அதிமுக வேட்பாளர் சரவணன் மற்றும் அதிமுக, தேமுதிக மாவட்ட செயலாளர்களும் இருந்தனர். பிரச்சார யுக்தி குறித்து அவர்கள் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளத்