முதல்வர் கடிதத்திற்கு கிடைத்த வெற்றி: தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் தமிழ்!

மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு என தகவல் வெளிவந்துள்ளது

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய அரசு புதிய அறிவிப்பு வெளியீடு செய்துள்ளது.

முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழி சேர்க்கப்பட்டதை அடுத்து அரசியல் தலைவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

நேற்று மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply