முதல்வர் குமாரசாமிக்கு இருக்கும் ஒரே கவலை இதுதான்: பாஜக கிண்டல்

முதல்வர் குமாரசாமிக்கு இருக்கும் ஒரே கவலை இதுதான்: பாஜக கிண்டல்

சமீபத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடகாவில் முதல்வர் பதவியை ஏற்று ஆட்சி செய்து வரும் முதல்வர் குமாரசாமியை இதுவரை இல்லாத வகையில் பாஜக தற்போது கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கூட்டணி அரசு பிழைக்குமா? என்ற ஒரே கவலை மட்டுமே முதல்வர் குமாரசாமிக்கு இருப்பதாக் அக்கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக பாஜகவின் சமூக வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

முதல்-மந்திரி குமாரசாமியின் கூட்டணி அரசு 100 நாட்களை கடந்துள்ளது. ஆனால் அதை கொண்டாடும் மனநிலையில் குமாரசாமி இல்லை. இந்த கூட்டணி அரசு பிழைக்குமா?, பிழைக்காதா? என்ற கவலையிலேயே அவர் உள்ளார். இந்த 100 நாட்களில் குமாரசாமி செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணீர் சிந்தியது தான் சாதனை. எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.

விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக குமாரசாமி சொல்கிறார். ஆனால் இதுவரை ஒரு விவசாயிக்கு கூட கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கவில்லை. சாதி மற்றும் பணத்தின் அடிப்படையில் மக்கள் ஓட்டுப்போட்டதாக குமாரசாமி கூறினார். இதன் மூலம் வாக்களித்த மக்களை முதல்-மந்திரி அவமதித்துவிட்டார்.

இந்த கூட்டணி ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் தூய்மை நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 216-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வது மற்றும் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் தொழிலில் மந்திரிகள் ஈடுபட்டுள்ளனர். வளர்ச்சி பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தங்களின் கவலைகளை தீர்த்துக்கொள்ளவே கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளன. இது சுயசேவையாற்றும் அரசு.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply