முதல்வர் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் முடிவு

முதல்வர் கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் முடிவு

மத்திய அரசால் நேரடியாக நியமனம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்றும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு உள்ளது என்’றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு புதுவை அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சர் கந்தசாமி, காங்., திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

 

Leave a Reply