முதல் கடல் விமானத்தில் முதல் பயணியாக பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பிரதமர் மோடி இன்று பயணம் செய்து குஜராத் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
குஜராத் சட்டமன்றத்தின் முதல் கட்ட தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதை அடுத்து இறுதி நாளான இன்று பிரதமர் மோடி மெக்சன்னா மாவட்டத்தின் அம்பாஜி கோவிலுக்கு செல்கிறார். தரை வழியாக செல்வதாக இருந்த அவரது பயணம் திடீரென பாதுகாப்பு காரணமாக விமானம் மூலம் செல்வார் எனக்கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் பிரதமர் மோடி சபர்மதி ஆற்றிலிருந்து நீர்வழி விமானம் மூலமாக தாரோய் அணைக்கு சென்றடைந்தார். இந்தியாவில் இயக்கப்படும் முதல் நீர்வழி விமானமான இந்த கடல் விமானத்தில் பயணம் செய்த முதல் பயணி பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதல்-மந்திரி விஜய் ரூபானி பேசுகையில், ‘மோடி கடல் விமானம் மூலம் அம்பாஜி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு மீண்டும் சபர்மதிக்கு வந்தடைவார்’ என தெரிவித்தார்.
PM @narendramodi set to board soon in #seaplane from Sabarmati River in Ahmedabad to Dharoi Dam shortly.
Opposition can watch #GujaratModel if they are not blind enough…
pic.twitter.com/W68GV7rFoD— Neetu Garg (@NeetuGarg6) December 12, 2017