முதல் டி-20 போட்டி: 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை வென்ற இந்திய அணி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் விளையாடியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அலென் 27 ரன்களும், ஹோப் மற்றும் பொல்லார்டு தலா 14 ரன்களும் எடுத்துள்ளனர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.
அதன்பின்னர் 110 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 110 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 31 ரன்களும், கிருணால் பாண்ட்யா 21 ரன்களும் எடுத்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் உள்ளது.