முதுநிலை சித்த மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் முதுநிலை சித்த மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 94 முதுநிலை சித்த மருத்துவ (எம்.டி. சித்தா) இடங்கள் உள்ளன.
இவற்றில் நிகழ் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை சுகாதாரத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்வதற்கும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இந்திய மருத்துவம், ஹோமியோபதி இயக்ககத்துக்கு அனுப்புவதற்கும் ஆகஸ்ட் 26 கடைசித் தேதியாகும்.
இந்தப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும்.