முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு-

முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு-

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவு சனிக்கிழமை (ஏப்ரல் 14) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான சேர்க்கைக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., முதுநிலை டிப்ளமோ ஆகிய மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு மார்ச் 27-ஆம் தேதி நிறைவு பெற்றது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற்றது. இணையதளம் மூலமாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வின் முடிவுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

கலந்தாய்வு முடிவு மற்றும் சேர்க்கைக் கடிதத்தை மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் www.mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இடங்களைப் பெற்ற மாணவர்கள் ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட கல்லூரிகளில் சென்று சேர வேண்டும்.

இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கான நடைமுறைகள் மே 12-ஆம் தேதி தொடங்க உள்ளன. மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இறுதிக்கட்ட கலந்தாய்வு நடைபெறும். முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து கலந்தாய்வு நடைமுறைகளையும் மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply