முத்தம் கொடுத்த கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி

முத்தம் கொடுத்த கணவரின் நாக்கை கடித்து துப்பிய மனைவி

டெல்லியில் ணவர் தனது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றபோது சரியாக முத்தம் தராததால் ஏமாற்றமடைந்த மனைவி ஆத்திரத்தில் கணவரின் உதட்டைக் கடித்துத் துப்பிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு இளம் தம்பதியினர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு திருமணமானது. தற்போது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையிலும் இருவரும் ரொமான்ஸ் செய்து வருகின்றனர். இருப்பினும் இருவருக்குக்ம் இடையே அவ்வப்போது சண்டை வருவதும் உண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் கணவர் தனது மனைவிக்கு முத்தம் கொடுத்துள்ளார். ஆனால் முத்தம் கொடுத்த கணவரின் நாக்கை மனைவி திடீரென தனது பற்களால் கடித்ததால் கணவரின் நாக்கு துண்டாகிப் போனது. இதனால் அலறித் துடித்த கணவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தனர்.

தற்போது அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் நாக்கை ஒட்டி வைத்தபோதிலும் மீண்டும் பேச முடியுமா? என்று தெரியவில்லை. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மனைவியை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply