முத்தலாக் விவகாரம்:அதிமுக ஒரு விடுகதை என ப.சிதம்பரம் டுவீட்

முத்தலாக் விவகாரம்:அதிமுக ஒரு விடுகதை என ப.சிதம்பரம் டுவீட்

சமீபத்தில் மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த முத்தலாக் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இதுகுறித்து முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள். ஆனால் மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை! மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை

ப சிதம்பரம் கூறியபடியே மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் முத்தலாக் மசோதாவை ஆதரித்தும் மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்த்துப் பேசினர். மேலும் முத்தலாக் மசோதாவின் வாக்கெடுப்பின் போது அதிமுக எம்பிக்கள் யாரும் அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply