முத்தூட் மினி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: காதலனுடன் பெண் ஊழியர் கைது
கோவையில் உள்ள முத்தூட் நிதி நிறுவனத்தில் சமீபத்தில் பெண் ஊழியர்களை தாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொள்ளையில் 803 சவரன் தங்கநகைகள், ரூ.1.30 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்த விசாரணையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் வேலை செய்த பெண் ஊழியரே அவரது காதலனுடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டது. தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோவையில் முத்தூட் மினி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் நாடகமாடிய பெண் ஊழியர் ரேணுகாதேவி மற்றும் அவரது காதலன் சுரேஷ் கைது செய்யப்பட்டனர்.
மேலும் முத்தூட் மினி நிறுவனத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 803 சவரன் தங்கநகைகள், ரூ.1.30 லட்சமும் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது