கொரோனா வைரஸ் பரவலை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கட்டுப்படுத்தும் பணியில் அனுபவமுள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு புதிய பொறுப்பை முதல்வர் முக ஸ்டாலின் கொடுத்து உள்ளார்
கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ள அனைத்துக்கட்சி குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1. திமுக – மருத்துவர் நா.எழிலன்
2. அதிமுக – மருத்துவர் சி. விஜய பாஸ்கர்
3. காங்கிரஸ் – ஏ.எம். முனிரத்தினம்
4. பாமக – ஜி.கே. மணி
5. பாஜக – நயினார் நாகேந்திரன்
6. மதிமுக – சதன் திருமலைக்குமார்
7. விசிக – எஸ்.எஸ். பாலாஜி
8. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – வி.பி. நாகை மாலி
9. இந்திய கம்யூனிஸ்ட் – தி. ராமசந்திரன்
10. மனித நேய மக்கள் கட்சி – ஜவாஹிருல்லா
11. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி – ரா. ஈஸ்வரன்
12. தமிழக வாழ்வுரிமை கட்சி – வேல்முருகன்
13. புரட்சி பாரதம் – பூவை ஜெகன் மூர்த்தி