முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் மரணம்.
முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ஜே.கே. ரித்திஷ் மாரடைப்பால் ராமநாதபுரத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46
கடந்த 2009ஆம் ஆண்டு திமுக எம்பியாகவும், 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுக உறுப்பினராகவும் ஜே.கே. ரித்திஷ் இருந்துள்ளார்.
இந்த நிலையில் ஜே கே ரித்திஷ் மாரடைப்பு காரணமாக இராமநாதபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.