முன்னாள் திமுக எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்
முன்னாள் திமுக எம்பி வசந்தி ஸ்டான்லி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 56
திமுக மாநிலங்களவை உறுப்பினராக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை பதவி வகித்த வசந்தி ஸ்டான்லி, கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி நேற்று காலமானார். அவருடைய மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல திமுக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.