முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்: எய்ம்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பூ

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்: எய்ம்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பூ

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் இந்தியப் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், இன்று மாலை 5:05 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதிலிருந்து அவரது உடல் நலிந்தது. அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டதால் சரியாக பேசமுடியாமல் போனது. இதனால், பல ஆண்டுகளாக பொதுவெளியிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார்.

இதனிடையே கடந்த ஜூன் 11ஆம் தேதி அவர் சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே சிறுநீரகக் கோளாறு காரணமாக அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டிப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

புதன்கிழமை இரவு எய்ம்ஸ் மருத்துவமனை வாஜ்பாய் உடல்நிலை குறித்து வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், “கடந்த 9 வாரங்களாக வாஜ்பாய்க்கு சிகிக்சை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அவரது உடல் நிலையில் கவலைக்கிடமாகியுள்ளது. அவருக்கு உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் சிகிச்சை வழங்கப்படுகிறது” எனக் கூறப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி விசாரித்து வந்தனர்.

Leave a Reply