முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கொலை செய்யப்பட்டார். அவரது கொலையால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் கடந்த 2000ம் ஆண்டு காலமான நிலையில் அவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள வசந்த் விகார் என்ற பகுதியில் வசித்து வந்தார்
இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததாகவும் இந்த கொள்ளை முயற்சியின்போது கொள்ளையர்கள் கிட்டி குமாரமங்கலத்தை கொலை செய்து விட்டதாகவும் தெரிகிறது
இன்று காலை பணிப்பெண் கொடுத்த தகவலின்படி போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் என்பதும் கொலை செய்த கொள்ளையர்களில் ஒருவர் பிடிப்பட்டதாகவும் மீதி இருவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது