மும்பை தொடர் வெடிகுண்டு குற்றவாளிக்கு என்ன தண்டனை? நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

மும்பை தொடர் வெடிகுண்டு குற்றவாளிக்கு என்ன தண்டனை? நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்த சம்பவங்களில் ஒன்று மும்பை தொடர் வெடிகுண்டு தாக்குதல். கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி நடந்த இந்த தாக்குதலில் 257 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர் படுகாயடைந்தனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதல் காரணமாக 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டபோதிலும் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா அபுசலீம், கரிமுல்லா கான், உள்பட 7 பேர் கைது தடா கோர்ட்டில் தனி விசாரணை நடத்தப்பட்டு வந்தது

கடந்த 20 வருடங்களுக்கும் மேல் நடந்து வந்த இந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் கரிமுல்லா கான், அபுசலிமிற்கு ஆகியோர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave a Reply