மும்பை மோனோ ரயிலுக்கு சீசன் டிக்கெட்.

கடந்த 2ஆம் தேதி முதல் மும்பையில் மோனோ ரயில் திட்டம் பயணிகள் வசதிக்காக பயன்பாட்டிற்கு வந்தது. இந்த சேவையை பெரும்பாலான பயணிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.  மகாராஷ்டிர முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் கடந்த 1ஆம் தேதி செம்பூர்– வடாலா இடையே முதல்கட்ட மோனோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் மோனோ ரயில் திட்டமான இந்த சேவையை தினமும் 20ஆயிரம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சேவை காலை 7 மணி முதல் மாலை 3 மணிவரை இயக்கப்படுகிறது.

மோனோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்தில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தி உள்ளனர்.இதன் மூலம் ஒரே வாரத்தில் 14,24,810 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

தற்போது மோனோ ரயில் திட்டத்திற்கு சீசன் டிக்கெட் வழங்க எருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் பயணம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply