முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி: கமல் குறித்து எச்.ராஜா
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம். முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டித்ததா இந்த கோழை? என பதிவு செய்துள்ளார்.
முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மநீம. முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்கதா கோழை. https://t.co/V3xo3AsZRh
— H Raja (@HRajaBJP) May 13, 2019