முள்ளங்கி – பூசணி சப்பாத்தி செய்வது எப்படி?

முள்ளங்கி – பூசணி சப்பாத்தி செய்வது எப்படி?

பொதுவாக காய்கறிகளை இப்படி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் போது வயிறு நிரம்பி இருப்பதுடன் உடல் எடையும் குறையும்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்,
முள்ளங்கி துருவல் – கால் கப்,
பூசணி துருவல் – அரை கப்,
பச்சைமிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி விழுது – 2 டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
இஞ்சி விழுது – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை:

முள்ளங்கி துருவலை லேசாக பிழிந்து கொள்ளவும்.

பூசணி துருவலை நன்றாக பிழிந்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் முள்ளங்கி துருவல், பூசணி துருவல், பச்சைமிளகாய் விழுது, கொத்தமல்லி விழுது, இஞ்சி விழுது, [பாட்டி மசாலா] சீரகத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

இந்த மாவை சிறிது எடுத்து சிறிய சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போடவும்.

மிதமான தீயில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.

சூப்பரான முள்ளங்கி – பூசணி சப்பாத்தி ரெடி.

இதற்கு தால் அல்லது தயிர் பச்சடியைத் தொட்டுக் கொள்ளலாம்.

Leave a Reply