மு.க.ஸ்டாலின் – எச்.ராஜா திடீர் சந்திப்பு ஏன்? தமிழக அரசியலில் பரபரப்பு
பாஜகவும், திமுகவும் அரசியல் ரீதியாக எதிரெதிர் கொள்கை உடைய கட்சிகள் என்பதால் இரு தரப்பினர்களும் கடுமையாக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் விரைவில் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்த பள்ளிகளுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதுகுறித்து மு.க.ஸ்டாலினுக்கு விளக்கம் அளிக்கவே எச்.ராஜா சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது.