மூட்டைப் பூச்சியும் மும்மூர்த்திகளும்!

மூட்டைப் பூச்சியும் மும்மூர்த்திகளும்!

indian_hindu_god_lord_mummoorthigal_sivan_vishnu_bramma_image_high_resolution_desktop_wallpaperவிக்கிரமாதித்தன் கதை ஒன்றில் மூட்டைப்பூச்சி வருகிறது. தாத்தா சொல்லியிருக்கிறார். கதை ஞாபகம் இல்லை. அதேபோல், பழைய இலக்கியங்களிலும் மூட்டைப் பூச்சி இடம்பிடித்திருக்கிறது. கோபாலகிருஷ்ணன் என்ற புலவரை மூட்டைப்பூச்சிகள் இம்சித்திருக்கின்றன. அந்த அனுபவம், தனக்கு மட்டுமல்ல, மும்மூர்த்திகளுக்குமே உண்டு என்பதைச் சொல்லி, பாட்டே எழுதியிருக்கிறார் இந்தப் புலவர்.

கண்ணுதலான் கயிலையையும் கார்வண்ணன் பாற்கடலையும்
எண்ணும் பிரமன் எழில் மலரையும் நண்ணியதேன்
வஞ்சகமூட் டுப்பூச்சி வன்கொடுமைக் காற்றாதே
அஞ்சியவர் சென்றார் அறி!

என்ன ஒரு கற்பனை பாருங்கள்! சிவனும் விஷ்ணுவும் பிரமனும் மலையிலும் பாற்கடலிலும், மலரிலும் ஏறிக்கொண்டது மூட்டைப்பூச்சிக் கடி தாங்காமல்தானோ என்கிறார் இந்தக் குறும்புக்காரப் புலவர்.

Leave a Reply