மூன்றாவது அணி என்று சொல்லக்கூடிய 11 கட்சிகளில் 9 கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமான கட்சிகள். எனவே மூன்றாவது அணியை காங்கிரஸ் 2 என்றே அழைக்கலாம் என பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் கூறியுள்ளார்.
இன்று ஒடிஷா மாநிலத்தில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி, காங்கிரஸ் மற்றும் மூன்றாவது அணியின் கட்சி தலைவர்களை கடுமையாக சாடினார். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மேற்கு மாநிலங்களில் அதிக வளர்ச்சியடைந்து வருவதாகவும், ஆனால் கிழக்கு பகுதிகளில் உள்ள மாநிலங்கள் இன்னும் பின் தங்கிய பகுதிகளாகவே இருக்கின்றது.
ஒரிஸ்ஸா மாநில முதல்வர் நவீன்பட்நாயக்கை கடுமையாக விமர்சனம் செய்த மோடி, தேர்தலுக்கு பின்னர் மூன்றாவது அணி காணாமல் போய்விடும் என்று கூறினார்.