மூன்றாவது முறையாக பாலிவுட் வில்லனை எதிர்க்கும் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே நடித்து முடித்துள்ள ‘2.0’ படத்தில் பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.
அதேபோல் அவர் நடித்த இன்னொரு படமான ‘காலா’ படத்திலும் பாலிவுட் நடிகர் நானா படேகர்தான் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கும் பாலிவுட் நடிகர் ஒருவரைத்தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வில்லனாக தேர்வு செய்துள்ளார். அவர் தான் நவாசுதீன் சித்திக். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் கலக்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.