தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ளது
நேற்று மதுரையைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரியை சேர்ந்த ஆதித்யா மற்றும் திருச்செங்கோட்டை சேர்ந்த முருகேசன் ஆகிய மூன்று மாணவர்கள் நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்
மாணவர்கள் நீட் தேர்வு குறித்து பயப்பட வேண்டாம் என்றும் தைரியமாக தேர்வுகள் எழுத வேண்டும் என்றும் தேர்வில் வெற்றி அல்லது தோல்வி என்பது வாழ்க்கையை நிர்ணயிக்காது என்றும் தைரியம் அளித்து வருகின்றனர்