மெக்சிகோ: சீற்றத்துடன் வெளிவரும் தீப்பிழம்புகளால் பரபரப்பு
மெக்ஸிகோ நாட்டில் உள்ள போப-கதேபட் என்ற எரிமலை திடீரென வெடித்து அதில் இருந்து சீற்றத்துடன் தீப்பிழம்புகளை வெளியேற்றி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
பியுப்லா நகரம் அருகே 17 ஆயிரத்து 800 அடி உயரம் கொண்ட இந்த எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த சில நாட்களாகவே சீற்றத்துடன் காணப்படுகிறது. நேற்றிரவு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துசிதறிய எரிமலை, தீப்பிழம்புகளை வேகமாக வெளியேற்றியது.
எரிமலை வெடித்த காட்சிகள், இரவு நேரத்தில் வான வேடிக்கை நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்