மெக்சிகோ நாட்டிற்கு ஒரு மில்லியன் நிதியுதவி செய்த கூகுள்
நேற்று மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம் காரணமாக சுமார் 200க்கும் அதிகமானோர் பலியாகிய சோக சம்பவம் காரணமாக அந்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது
பூகம்பத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளை மீட்புப்படையினர் அகற்றி வரும் நிலையில் உலக நாடுகள் மெக்சிகோவுக்கு நிதியுதவியும், மீட்புப்படையினர்களையும் அனுப்பி உதவி செய்து வருகின்றன.
இந்த நிலையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.