‘மெர்சல்’ ரிலீஸ் ஆகியே தீரும்: விஷாலுடன் மோத தயாராகிய விஜய்
இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் அனைத்து தடைகளையும் தாண்டிவிட்ட போதிலும் இன்னும் ஒரே ஒரு தடையை தாண்டவேண்டிய நிலையில் உள்ளது. அதுதான் விஷால் தலைமையிலான தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத்தின் புதுப்பட ரிலீசுக்கு தடை என்ற போராட்டம்
கேளிக்கை வரியை எதிர்த்து புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்ற நடவடிக்கை தீபாவளி வரும் நீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தீபாவளிக்கு பிறகும் நீடிக்கும் வகையில் இருந்தால் ‘மெர்சல்’ ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் தற்போது தயாரிப்பாளருக்கே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் ஆகியே தீரும் என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயார் என்றும் விஜய் தரப்பு கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அனேகமாக இப்போதே விஜய்-விஷால் போர் தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.