மேயர் தேர்தல் குறித்த அவசர சட்டம்: இன்று சட்டமன்றத்தில் தாக்கல்?
மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதேபோல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக சட்டப்பேரவையில் இன்று சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது என கூறப்படுகிறது
இதுவரை மேயர், நகராட்சி தலைவர் ஆகியோர் நேரடியாக மக்களே தேர்ந்தெடுத்த நிலையில் இந்த சட்டம் தாக்கல் செய்யப்பட்டால், இனி கவுன்சிலர்களே மேயர் மற்றும் நகராட்சி தலைவரை தேர்வு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது