மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது? டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது? டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்

மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது..? இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் இதற்கு முன்பு நடந்துள்ளனவா..? என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த மருத்துவர் ஒருவர், நோயாளியின் குடும்பத்தினரால் தாக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் கடந்து 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டம் செய்து வரும் மருத்துவர்கள் முதலமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் பேசிய போது “ மேற்கு வங்கத்தில் என்ன நடக்கிறது..? இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் இதற்கு முன்பு நடந்துள்ளனவா..? இதற்கு அரசு நிர்வாகம் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவர்களுக்கு தங்களுக்கு உள்ள அதிகாரத்தில் ஒருபோதும் அகங்காரம் இருக்க கூடாது. இல்லையென்றால் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். பல்வேறு அதிகாரங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளன. அதுபோன்ற அதிகாரங்களை ஒடுக்க வேண்டியது அவசியமாகிறது” என்று தெரிவித்தார்.

Leave a Reply