பரபரப்பு தகவல்
தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் எம்பிக்கள் என அரசியல்வாதிகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை எம்எல்ஏவாக அதிமுக எம்எல்ஏ ஆறுமுகம் என்பவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
எம்எல்ஏ ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொட்டு ஏற்பட்டதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது