மேலும் ஒரு மாதம் லாக்டவுன் நீட்டிப்பு:

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கில் என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு

* சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி. சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு. சென்னையில் மற்ற கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு

* சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்

* ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

* காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி! முன்னதாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது

* இ- பாஸ் நடைமுறைகளில் மாற்றம் இல்லை! மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளி மாநிலங்களுக்கு செல்லவும் இ-பாஸ் கட்டாயம்!

* பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்

* பேருந்து சேவைகளுக்கு அனுமதி இல்லை. மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை தொடரும்

* திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்

* சுற்றுலா தலங்களுக்கு ,வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்!

* ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி. ஆனால் மாநகராட்சி பகுதிகளில் உள்ள எந்த கோவில், மசூதி, தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை

* மெட்ரோ ரயில், மின்சார ரயில்களுக்கான தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும்

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமானப்போக்குவரத்திற்கான தடை தொடரும்

லாக்டவுன், ஞாயிறு முழு ஊரடங்கு, தமிழக அரசு, பள்ளி கல்லூரிகள்,

Leave a Reply