ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் வெற்றி பெற்றன.
சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 62 ரன்களும், டீபிளஸ்ஸிஸ் 33 ரன்களும் எடுத்தனர்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களே எடுத்தது. கேப்டன் விராத் கோஹ்லி 51 ரன்கள் எடுத்தார். சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் நடந்த இரண்டாவது போட்டியில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது மழை குறுக்கிட்டதால் கொல்கத்தா அணிக்கு 12 ஓவர்களில் 118 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. உத்தப்பா 34 ரன்களும், பாண்டே 33 ரன்களும் எடுத்தனர். வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.