மே 2ஆம் தேதி மட்டும் ஊரடங்கு கிடையாது: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2ஆம் தேதி ஊரடங்கு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் அறிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2ஆம் தேதி ஊரடங்கு இல்லை என்றும் வாக்கு எண்ணிக்கை தங்குதடையின்றி வழக்கம்போல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் வெற்றி பெறும் கட்சியினர் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply