மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டி.வி! விலை என்ன தெரியுமா?
மொபைல் போன் உள்பட பல துறைகளில் சிறந்து விளங்கி வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் முதல்முறையாக ஆண்ட்ராய்டு டிவியை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டு புதிய மாடல்களில் வெளிவந்துள்ள இதன் விலை ரூ.51,990 மற்றும் ரூ.61,990 ஆகும்
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி. மாடலை இரண்டு வேரியன்ட்களில் அறிமுகம் செய்திருக்கிறது. பெயரிடப்படாத இரண்டு டி.வி. மாடல்கள் 49 இன்ச் மற்றும் 55 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
கூகுள் சான்று பெற்றிருப்பதோடு, புதிய டி.வி.யில் ஹை-டைனமிக் ரேன்ஜ் (ஹெச்.டி.ஆர்.) இருப்பதால் காட்சி தரம் தெளிவாக இருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த தொலைகாட்சிகளில் அதிகாரப்பூர்வ கூகுள் பிளே வசதி கொண்டிருப்பதால், செயலிகள், கேம்கள், திரைப்படம் மற்றும் இசை உள்ளிட்டவற்றுக்கான வசதிகள் கொண்டிருக்கின்றன.
புதிய டி.வி. மாடல்கள் ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி, டி.டி.எஸ். சவுன்ட் சான்று, குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், 2.5 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. EMMC ஸ்டோரேஜ், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், MHL கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கூகுள் அசிஸ்டன்ட் இருப்பதால் குரல் மூலம் தேடலாம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் புதிய டி.வி.யில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சொந்த பியூர் சவுன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது டால்பி மற்றும் டி.டி.எஸ். ஹெச்.டி. ஆடியோ சான்று பெற்றிருக்கிறது.
இந்த டி.வி. மாடல்களில் 2×12 வாட் ஸ்பீக்கர்களும், மின்சக்தியை குறைவாக பயன்படுத்தும் இகோ எனர்ஜி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. புதிய டி.வி. மாடல்களின் விற்பனை இம்மாதம் துவங்கும் என்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் இந்த டி.வி. கிடைக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது