மொபைலில் ஆப் டவுன்லோட்… இந்தியா 4 வது இடம்; முதல் 3 இடத்தில்..?

மொபைலில் ஆப் டவுன்லோட்… இந்தியா 4 வது இடம்; முதல் 3 இடத்தில்..?

1ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது ஸ்மார்ட்போனில் திரைப்படம் பார்ப்பது, கேமிங் விளையாடுவதுபோல அப்பிளிகேஷன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

சேமிப்பு, விளையாட்டு, ஆன்மீகம், அறிவியல் என அனைத்திற்கும் ஆப்-கள் வடிவமைக்கப்பட்டு சந்தையில் இருக்கின்றன. இதுபோன்ற ஆப்பை மொபைலில் அதிகளவு டவுன்லோட் செய்து பயன்படுத்துவதில் இந்தியா 4 வது இடத்தில் இருப்பதாக மொபைல் ஆய்வு நிறுவனமான App Annie தெரிவித்துள்ளது.
ஒரு வருடம் எவ்வளவு ஆப் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது என கணக்கிடப்பட்ட இந்த ஆய்வில் சீனா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அதிகளவு ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருவதாக மொபைல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் ஸ்மார்ட்போனில் மொபைல் ஆப் பயன்படுத்தும் நேரம் கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 770 கோடி மொபைல் அப்பிளிகேஷன் டவுன்லோட் செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2020 ல் 2000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply