மொபைல் ஆப்ஸ்’ன் விஸ்வரூபம் (இன்போகிராபிக்ஸ்)
‘நீரின்றி அமையாது உலகு’ என்றான் வள்ளுவன். அதேப்போல் இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ப ‘ஆப்ஸ் இன்றி அமையாது உலகு’ என்று மாற்றிக்கொள்ளும் அளவிற்கு மொபைல் அப்பிளிகேஷன் பயன்பாடும், அதன் தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச அளவில் மொபைல் போன் அப்பிளிகேஷன்கள் குறித்து flurry Analytics எனும் நிறுவனம் ஆய்வு செய்தது. அதில் மொபைல் அப்பிளிகேஷன்களை செலவிடும் கால அளவில் கடந்த 2015ல் 58 சதவிகிதமும், 2014ல் 76 சதவிகிதமும், 2013ல் 103 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக உலக அளவில் மொபைல் ஆப்ஸ் செலவிடும் கால அளவில் திறன் வளர்ப்பு (Personalization) சம்பந்தமான அப்பிளிகேஷன்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கீழே உலக அளவில் அப்பிளிகேஷன்களை செலவிடும் கால அளவு குறித்து
இன்போகிராபிக்ஸ் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் திறன் வளர்ப்பு, செய்திகள், லைஃப் ஸ்டைல் போன்ற ஐகான்களை க்ளிக் செய்து ஒவ்வொரு வகையான அப்பிளிகேஷன்களில் செலவிடும் கால அளவு குறித்து
தெரிந்து கொள்ளுங்களேன்.