மொபைல் இண்டர்நெட்டுக்கு அடிமையானவர்களை மீட்க ஒரு மருத்துவமனை
மொபைல் இல்லாத மனிதர்களே இல்லை என்ற நிலையில் பலர் மொபைல் போனிற்கும், அதில் இருக்கும் இண்டர்நெட்டுக்கும் அடிமையாகியுள்ளனர். சாப்பாடு, குடும்பம், வேலை ஆகியவற்றை மறந்து மொபைலிலேயே மூழ்கியிருப்பவர்களை மீட்டெடுக்க ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மொபைலில் அடிமையானவர்களை மீட்கவென்றே பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஒரு மருத்துவமனையை மனநல மருத்துவர் டாக்டர் பால் என்பவர் தொடங்கியுள்ளார்.
இந்த மருத்துவமனைக்கு பலர் குறிப்பாக இளைஞர்கள் வருகை தந்து கவுன்சிலிங் பெற்று செல்வதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையை இந்தியாவின் பல நகரங்களிலும் எதிர்காலத்தில் தொடங்கும் திட்டம் இருப்பதாக டாக்டர் பால் தெரிவித்தார்.