மொபைல் போனில் இருந்து கிளம்பிய குபுகுபு புகை: அதிர்ச்சி வீடியோ
மொபைல் போன் அவ்வபோது வெடிப்பது, தீப்பிடிப்பது போன்ற சம்பவங்கள் உலகின் பல பகுதிகளில் நடந்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மொபைல் போனில் இருந்து குபுகுபுவென புகை வந்துள்ள சம்பவம் ஒன்று மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது
ஆம், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மேற்குமிட்னாபூர் என்ற பகுதியில் ஒரு இளைஞர் தனது மொபைல் போனை பையில் வைத்திருந்தார். அப்போது திடீரென அந்த மொபைலில் இருந்து குபுகுபுவென புகை கிளம்பியது. உடனே அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் உடனடியாக மொபைல் போனை எடுத்து வெளியே வைத்துவிட்டு தனது சட்டையை கழட்டினார்.
இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ இதோ
#WATCH: Smoke emits from a mobile phone kept in a person's pocket in West Midnapore, man suffers minor injuries. #WestBengal pic.twitter.com/oN68lAzpAZ
— ANI (@ANI) October 26, 2017