மொரிஷியஸ் தப்பியோடிய மாணவர் இர்பான் கைது
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மொரிஷியஸ் நாட்டிற்கு தப்பியோடியதாக கூறப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர் இர்ஃபான் சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்செய்த நிலையில் அவரை அக்டோபர் 9 வரை சிறையிலடைக்க சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது
சேலத்தை சேர்ந்த மாணவர் இர்பான் உள்பட நான்கு மாணவர்கள் மீது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டது. இதனையடுத்து நான்கு மாணவர்களிடம் விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்தபோது மற்ற மூன்று மாணவர்களும் விசாரணைக்கு ஒத்துழைத்தனர். ஆனால் இர்பான் மட்டும் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தெரிய வந்தது
இதனையடுத்து மாணவர் இர்பான் மொரிஷியஸ் நாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்பட்ட நிலையில் மொரிஷியஸ் காவல்துறையினர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. இதனையடுத்து இர்பான் மொரிஷியஸில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பப்பட்டார். தமிழகம் வந்த இர்பானை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் இருந்து இன்னும் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது